என்ன நம்பி பொண்ணு கொடுத்துட்டாங்க.. திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரதீப் அந்தோணி..!

 
Pradeep

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரதீப் ஆண்டனி தன்னுடைய நீண்ட நாள் காதலியுடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் ஹாட் டாபிக்காக இருந்தது பிரதீப் ஆண்டனி. அவர் இருந்தால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயா, பூர்ணிமா, ஜோவிகா உள்ளிட்டோர் கமலிடம் குற்றச்சாட்டு வைத்ததை அடுத்து அவர் வீட்டில் இருக்கலாமா என்பது குறித்து ஹவுஸ் மேட்ஸ் அனைவரிடமும் கருத்து கேட்டார். அவர்கள் பெரும்பாலானோர் ஒத்துக்கொள்ளாததால் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

Pradeep

பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து இருந்தால் கூட கிடைக்காத பேரும் புகழும் அவர் வெளியேறிய பின்னர் கிடைத்தது என்பதும் அவர் தற்போது சினிமாவில் பிஸியாக இருப்பதாகவும் சில படங்களில் நடித்துக் கொண்டும் ஒரு படத்தை இயக்க முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதீப் அந்தோணி தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் திருமணம் செய்ய போகும் மணமகளுடன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எனக்கெல்லாம் நடக்காதுன்னு நினைச்சேன், பரவால்ல பொண்ணு கொடுக்குறாங்க என்ன நம்பி, இது 90ஸ் கிட்ஸ்களின் சாதனை என்று கேப்ஷனாக பிரதீப் அந்தோணி பதிவு செய்துள்ளார். இருப்பினும் அவரை திருமணம் செய்ய போகும் மணப்பெண் குறித்த எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web