விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

 
Mark Antony

விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க்க ஆண்டனி’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

லத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் நடித்து வரும் படம் ‘மார்க் ஆண்டனி’. இந்தப் படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இது விஷாலின் 33-வது படமாகும். இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர் வினோத்குமார் திட்டமிட்டிருக்கிறார். 

Mark Antony

இந்தப் படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோருக்கு இரண்டு விதமான தோற்றங்கள் இருக்கும் என்றும், அது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் எனவும் படக்குழுவினர் முன்னதாக தெரிவித்திருந்தனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் படத்தின் வெளியிட்டு தேதியை பட குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

Mark Antony

அதன்படி இந்தப் படம் ஜூலை 28ம் தேதி  திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  இதனால் படத்திற்கு தற்போது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஜூலை 28ம் தேதி மார்க்க ஆண்டனி வெளியாக உள்ள நிலையில் விரைவில் படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web