12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் விஷால் படம்!!
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கிய மதகஜராஜா திரைப்படம் ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் 2012ம் ஆண்டு தொடங்கப்பட்டும் 2013ம் ஆண்டு முடிவடைந்தது. தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட சிக்கலினால் இது வரையிலும் வெளியாக வில்லை.
இப்போது விஷால் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனத்தின் வெளியீடாக மதகஜராஜா வருகிறது. விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். சந்தானம் காமெடியானாக நடித்துள்ளார். விஷாலுடன் சந்தானம் இணைந்து காமெடியில் கலக்கிய பட்டத்து யானை படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் இணைந்து நடித்தனர்.
அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி, விஷால் , சுந்தர் சி பங்கேற்றனர். பழைய நினைவுகளை மூவரும் பகிர்ந்து கொண்டனர்.
சுந்தர் சி படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். 12 ஆண்டுகள் கழித்து வெளியானாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் என்று விஷால் தெரிவித்துள்ளார்,