மிஷ்கினின் குழந்தையை தத்தெடுத்த விஷால்.. துப்பறிவாளன் 2 படம் குறித்த அப்டேட்!

 
Vishal - Mysskin

மிஷ்கினின் குழந்தையை தான் தத்து எடுத்துக் கொள்வதாகவும் அந்த குழந்தையை மிகச் சிறப்பாக கரை சேர்ப்பேன் என்றும் விஷால் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். இவர் நடிகர் சங்க பொதுச் செயலாளராக உள்ளார். 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, அவன் இவன், துப்பறிவாளன், சண்டைக்கோழி-2 என தொடர்ந்து நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ படம் சூப்பர் ஹிட்டடித்தது. தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. அதிரடி ஆக்ஷன் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் விஷாலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Vishal - Mysskin

அதில் தன்னுடைய 25 ஆண்டு கால கனவு தற்போது நனவாகியுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன்பு தான் என்னவாக வேண்டும் என்று யோசித்து திரைத்துறைக்கு வந்தேனோ தற்போது அது நனவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் ஒரு டைரக்டர் ஆக வேண்டும் என்று தன்னுடைய தந்தையிடம் கேட்டதாகவும் அவர்தான் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக தன்னை இணைத்து விட்டதாகவும் விஷால் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தன்னுடைய பாதையில் நடிகராக மாறியதாகவும் இத்தனை ஆண்டு காலம் ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் தான் நடிகனாக தொடர்ந்து வருவதாகவும் அதற்கு ரசிகர்களுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு இயக்குனராக தொடர்ந்து ஆசை இருந்த போதிலும் நடிகனாக தொடர்ந்து வந்த தன்னுடைய பயணத்தை டிஸ்டர்ப் செய்யக்கூடாது என்பதற்காக தான் அந்த கனவை ஒத்தி வைத்ததாகவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய டைரக்டர் கனவு நனவாகும் தருணம் தற்போது வந்துள்ளதாகவும் துப்பறிவாளன் 2 படத்திற்காக தான் லொகேஷன் பார்ப்பதற்காக தற்போது லண்டன் செல்ல உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளா.ர் துப்பறிவாளன் 2 படத்திற்கான வேலைகள் துவங்கப்பட்டுள்ளதாகவும் மே மாதத்தில் இருந்து இந்த படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இயக்குனராக ரசிகர்கள் முன்னால் நின்று பேசிக் கொண்டிருப்பது தனக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளதாகவும் விஷால் தெரிவித்துள்ளார். ஒரு விஷயத்தை சாதிக்க வேண்டும் என்ற கனவு இருந்தால் எத்தனை ஆண்டுகள் கழித்தும் அதை சாதிக்கும் வாய்ப்புகள் நமக்கு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தருணத்தில் தன்னுடைய தந்தை, நடிகர் அர்ஜுனுக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அர்ஜுனின் பெயரை தான் காப்பாற்றுவேன் என்றும் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனர் மிஷ்கினுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மிஷ்கினின் குழந்தையை தான் தத்து எடுத்துக் கொள்வதாகவும் அந்த குழந்தையை மிகச் சிறப்பாக கரை சேர்ப்பேன் என்றும் விஷால் மேலும் தெரிவித்துள்ளார். முன்னதாக துப்பறிவாளன் 2 படத்தை மிஷ்கின் இயக்கவிருந்த நிலையில் இந்தப் படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்தப் படத்தை தானே இயக்கவுள்ளதாக விஷால் கூறியிருந்தார். இந்நிலையில் துப்பறிவாளன் 2 படத்தின் சூட்டிங் உள்ளிட்டவற்றை அவர் வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார்.

From around the web