புடவையில் கிரிக்கெட் விளையாடி அசத்திய நமீதா.. வைரல் வீடியோ!

 
Namitha

கர்நாடகா தேர்தல் தோல்வி பிரச்சனை இல்லை, அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என நடிகை நமிதா தெரிவித்துள்ளார்.

17 வயதில் மாடல் உலகில் நுழைந்த நமீதா, 2002-ம் ஆண்டு ‘சொந்தம்’ எனும் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஜெமினி, ஒக்க ராஜு ஒக்க ராணி, ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி என பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

அதையடுத்து தமிழில் 2004-ம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நமீதா. அதன்பிறகு ஏய், சாணக்யா, ஆணை, இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார். எரிக் மேனிங் இயக்கிய ‘மாயா’ என்ற ஆங்கிலப் படத்திலும் நமீதா நடித்துள்ளார்.


இந்த நிலையில் நடிகையும் தமிழ்நாடு பாஜக நிர்வாகியுமான நமீதா, கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியைத் துவங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். அம்மாவாக என்னுடைய முதல் அன்னையர் தினம். மைசூர் சிங்கம் அண்ணாமலை வந்ததுக்கு பிறகு பாஜக கட்சி நல்லா வளர்ந்துட்டு இருக்கு. எங்க போனாலும் பாஜக பத்தி தான் பேசறாங்க. இப்போ அவரோட பார்வை தமிழ்நாட்டு மேல இருக்கு” என்றார்.

Namitha

கர்நாடகா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த நமீதா, “தலைவர் அண்ணாமலை தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயலாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி மேல், தலைவர் அண்ணாமலை மேல் நம்பிக்கை இருக்கிறது. இன்று இல்லை என்றாலும் இன்னொரு நாள் நடக்கும்” என்று பேசினார்.