சிக்னல் விதிமீறல்.. நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம்.. போக்குவரத்து போலீசார் அதிரடி!

 
VIjay

நடிகர் விஜய்யின் கார் சிக்னலில் நிற்காமல் சென்றதால் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

கடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிகளை பெற்றனர். அவர்களை நடிகர் விஜய் நேரில் அழைத்து பாராட்டியதுடன் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் சில அறிவுரைகளை கொடுத்து அனுப்பினார். எனவே, விஜய் மக்கள் இயக்கம் வரும் காலங்களில் அரசியல் கட்சியாக மாற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்றாற் போலவே, அம்பேத்கர் பிறந்தநாளன்று அவரது சிலைக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இப்தார் நிகழ்ச்சிகளை நடத்தினர். கடந்த மாதம் 28-ம் தேதி உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.

Vijay

அணமையில் தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்து நடிகர் விஜய் பரிசு வழங்கினார். சுமார் 12 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சளிக்காமல் நின்று மாணவர்களுடன் புகைப்படம் எடுத்து சான்றிதழ் வழங்கினார்.

இந்நிலையில் சென்னை பனையூரிலுள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், 234 தொகுதியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், சுமார் 2 மணி நேரம் அந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


நேற்று நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கும் விழாவை சிறப்பாக நடத்தியதற்கு நன்றிகளை தெரிவித்தும், உங்களுடைய மாவட்டங்களில் முக்கிய பிரச்சினைகள் என்னென்ன.? எனவும், மக்கள் மன்றத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து மாவட்ட வாரியாக கேட்டறிந்தாக கூறப்பட்டது. தொடர்ந்து நிர்வாகிகளின் நலனை கேட்டறிந்தும் அவர்களுடன் புகைப்படங்களையும் விஜய் எடுத்துக்கொண்டார்.

இந்நிலையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக நடிகர் விஜய்-க்கு ரூ.500 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சிக்னலை மதிக்காமல் விஜய்-யின் கார் சென்றதாக புகார் எழுந்தநிலையில் போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

From around the web