விக்ரம் பிறந்தநாள்.. தங்கலான் மேக்கிங் வீடியோ வெளியிட்ட பா.ரஞ்சித்... ரசிகர்களுக்கு செம ட்ரீட்.!

 
thangalaan

நடிகர் விக்ரமனின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு தங்கலான் படக்குழு மேக்கிங் வீடியோ வெளியிட்டுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தங்கலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார். 

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கே.ஜி.எஃப்-ஐ மையமாக வைத்து வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக தங்கலான் உருவாகி வருகிறது. தங்கலான் திரைப்படத்தை 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கி வருகின்றனர். இப்படத்தில் மலையாள நடிகை பார்வதி, மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

Vikram

இந்த நிலையில் இன்று சியான் விக்ரம் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரமுக்கு தனது பிறந்த நாளை தெரிவித்ததோடு ‘தங்கலான்’ படத்தின் மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். 

இந்த வீடியோவில் உள்ள காட்சிகளை பார்க்கும்போது படக்குழுவினர் வேற லெவலில் ரிஸ்க் எடுத்து படத்தை உருவாக்கி வருகிறார்கள் என்பது தெரிய வருகிறது. குறிப்பாக பல மணி நேரம் விக்ரமுக்கு மேக்கப் போடப்பட்டுள்ளது என்பதும், அவருடைய மேக்கப் மிரட்டும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் ஏராளமான துணை நடிகர்களுடன் கூடிய பிரம்மாண்டமான காட்சிகள் இந்த படத்தில் உருவாகி வருகிறது என்பதும் இந்த வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. மொத்தத்தில் ‘தங்கலான்’ திரைப்படம் ரசிகர்களுக்கு இதுவரை இல்லாத அளவில் ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் என்பது இந்த வீடியோவில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது

From around the web