விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘The GOAT’.. எப்போது ரிலீஸ்? தீயாய் பரவும் தகவல்

 
Goat

விஜய் நடிப்பில் உருவாகிவரும் தி கோட் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘லியோ’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கம் புதிய படத்தில் நடித்து வருகிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த இந்த படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

Goat

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி தி கோட் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் பொங்கலையொட்டி வெளியான தி கோட் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த போஸ்டரில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தி கோட் திரைப்படம் கோடை விடுமுறை நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தப் படம் வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தி கோட் படம் மற்ற எந்த படங்களுடன் நேரடியாக மோதாமல் ரிலீசாக வெளிவருவதற்கு படக்குழுவினர் முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

GOAT

முன்னதாக கடந்த பொங்கலையொட்டி விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் வெளியாகின. இரு படங்களும் அதிகமாக வசூலை பெறும் என்ற எதிர்பார்த்த நிலையில் அதற்கு குறைவான அளவுக்கே கலெக்ஷன் ஆனது கவனிக்கத்தக்கது.

From around the web