விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ படத்தின் பூஜை.. வைரலாகும் போட்டோஸ்

 
Thalapathy 69

விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோட்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படமே விஜய் நடிக்கும்  கடைசி படம் என அவர் அறிவித்து இருந்தார். அதற்கடுத்து முழுவதும் அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார்.

Thalapathy 69

‘தளபதி 69’ படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க உள்ளார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் தமிழ் படம் இதுவாகும்.  இந்த படத்தில் நடிகர் பாபி தியோல், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், நடிகை பிரியாமணி, நடிகர் நரேன், நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இந்த நிலையில், ‘தளபதி 69’ படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது. ‘தளபதி 69’ பட பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த பூஜையில் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குநர் எச்.வினோத், பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். நாளை இப்படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

From around the web