விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. இரண்டு பாகங்களாக வெளியாகிறது லியோ படம்..?

 
Leo

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படம் 2 பாகங்களாக வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘வாரிசு’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Leo

காஷ்மீர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இறுதிகட்டப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

அண்மையில் நடிகர் சஞ்சய் தத் பிறந்தநாள் அன்று அவருக்கு பரிசளிக்கும் விதமாக படத்தின் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.


இந்நிலையில், லியோ படத்திற்காக மீண்டும் சில காட்சிகளை எடுக்க படக்குழு காஷ்மீர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் விஜய் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. லியோ திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்தின் இரண்டாம் பாகம் 2025/2026-ல் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

From around the web