விஜய் 49-வது பிறந்தநாள்.. வெளியானது ‘லியோ’ பட ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் விஜய்யின் 49-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
‘வாரிசு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்த நாள் ஸ்பெஷலாக இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
#LeoFirstLook pic.twitter.com/zephjhBVbu
— Vijay (@actorvijay) June 21, 2023
இந்நிலையில் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் விஜய்யின் பிறந்த நாளான நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகி உள்ளது. இதனை அதன் படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதனை நடிகர் விஜய்யின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.