பொங்கல் போட்டியில் பங்கேற்கும் விஜயகாந்த் மகன் படம்!!
பொங்கல் போட்டியிலிருந்து அஜீத்தின் விடாமுயற்சி விலகிக் கொண்டதை அடுத்து பல படங்கள் பொங்கல் போட்டியில் குதித்துள்ளன. பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் படமும் வெளியாகிறது. இயக்குனர் ஷங்கரி முதல் நேரடித் தெலுங்குப் படமான ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்தின் தமிழ் வடிவமும் பொங்கலுக்கு வருகிறது.
இந்தப் படங்களுடன் மேலும் சில படங்களும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதில் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடித்துள்ள படை தலைவன் படமும் சேர்ந்துள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ஏ.ஐ தொழில் நுட்பத்தில் விஜயகாந்த் தோன்றுகிறார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.
சகாப்தம், மதுரை வீரன் என இரண்டு படங்களில் சண்முக பாண்டியன் ஏற்கனவே நடித்துள்ள நிலையில் படை தலைவன் அவருடைய மூன்றாவது படமாகும்.கஸ்தூரி ராஜா, யாமினி சுந்தர், முனீஸ்காந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘வால்டர்’, ‘ரேக்ளா’ படங்களை இயக்கிய அன்பு இயக்குகிறார்.