கல்யாணத்துக்கெல்லாம் கரெக்டா போயிடுவாரு விஜய்! கலாய்க்கும் நெட்டிசன்கள்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய 15 ஆண்டு கால காதலன் ஆண்டனி தட்டில் ஐ நேற்று கோவாவில் திருமணம் செய்து கொண்டார்.
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணத்தில் கலந்து கொள்ள தவெக தலைவரும் நடிகருமான விஜய் நேரில் சென்றிருந்தார். நடிகை திரிஷாவும் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் கோவா வரை சென்று கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விஜய் கலந்து கொண்டதை சமூகத் தளங்களில் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்
வெள்ள நிவாரணப் பொருட்களை தனது அலுவலகத்திற்கே மக்களை அழைத்து வந்ததை குறிப்பிடும் வகையில், “மக்களைச் சந்திக்கத் தான் நேரம் இல்ல, மத்தபடி கல்யாணத்துக்கு எல்லம் நேரில் போயிடுவாரு” என்று குத்தலாகப் பேசி வருகின்றனர் சமூகத்தளவாசிகள்.
தமிழ்நாடு முழுவதும் வெள்ளம் என்று மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில் கோவாவுக்கு திருமணத்திற்காச் சென்ற விஜய்யை அரசியல் கட்சித் தொண்டர்களும் வசை பாடி வருகிறார்கள்.