விஜய் டிவி பிரபலத்திற்கு நிச்சயதார்த்தம்.. பொண்ணு முகத்தை காட்டாமல் போட்டோ ஷூட்..!

விஜய் டிவி பிரபலத்தின் நிச்சயதார்த்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் பெண்ணின் புகைப்படம் மறைக்கப்பட்டுள்ளதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற பல்வேறு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நாஞ்சில் விஜயன். பின் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். இதற்கென்றே நாஞ்சில் விஜயனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. மேலும், இவர் விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சில படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான வள்ளி திருமணம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் காமெடி நிகழ்ச்சியிலும் நாஞ்சில் விஜயன் பங்கேற்று வருகிறார். வத்திக்குச்சி என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நாஞ்சில் விஜயன் நடித்து வருகிறார். இதன் மூலம் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது.
இந்த நிலையில் நாஞ்சில் விஜயனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் அவரது நிச்சயதார்த்தம் தற்போது நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் தனது அருகில் நின்றிருந்த மணப்பெண்ணின் முகத்தை காட்டாமல் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் ’பெண்ணின் முகமே இல்லை என்றால் எப்படி நாங்கள் வாழ்த்து தெரிவிப்பது? பொண்ணு முகத்தை காட்டுங்கப்பா என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிச்சயதார்த்தத்தில் விஜய் டிவியின் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை மணமக்களுக்கு தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் நாஞ்சில் விஜயன் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.