விஜய் நடிக்கும் ‘தளபதி 68’-ல் 90ஸ் ஹீரோக்கள்.. வெங்கட் பிரபுவின் மாஸ் பிளான்.! 

 
Thalapathy 68

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கயுள்ள ‘தளபதி 68’ படத்தில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் ஹீரோக்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையை விஜய் நடிக்கும் 68வது திரைப்படத்திற்கான அறிவிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியானது.

Vijay - Prashanth

வெங்கட் பிரபு இயக்கவுள்ள இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் நடிகர்கள் தேர்வும் நடைபெறுகிறது. அதில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படும் நிலையில்  ஒரு கதாபாத்திரத்திற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

இப்படம் 3டி VFX டெக்னாலஜியில் உருவாக உள்ளது. இதற்காக படக்குழு சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு சென்று வந்துள்ளனர். சிம்புவிற்கு மாநாடு என்ற திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர் வெங்கட் பிரபு. அவரது அடுத்த படமான கஸ்டடி தோல்வி அடைந்ததால் தளபதி 68 திரைப்படத்தை வெற்றி படமாக்க கடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

Vijay - Prabhu deva

இதன் ஒரு பகுதியாக ‘தளபதி 68’ படத்தில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் ஹீரோ பிரஷாந்த் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் பிரபு தேவாவும் நடிக்க வாய்ப்பு உள்ளதாக சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web