ஹீரோவான விஜய் சேதுபதி மகன்.. படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

 
Phoenix Veezan

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பீனிக்ஸ் வீழான்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிசியான நடிகர் என்ற அடையாளத்துடன் வலம் வருபவர், விஜய் சேதுபதி. ஒரே சமயத்தில் கதாநாயகன், வில்லன், குணசித்திர நடிகர், சிறப்பு தோற்றம் என பலவற்றிலும் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து வருகிறார். இவரது நடிப்பு திறமையை மற்றமொழி சினிமாக்காரர்களும், ரசிகர்களும் கூட கொண்டாடி வருகிறார்கள். எளிமையான நடவடிக்கையால் தொடர்ந்து கவனம் ஈர்த்தும் வருகிறார்.

Vijay Sethupathi

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இவர் ஏற்கனவே நானும் ரவுடிதான், சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். மேலும் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் 2ம் பாகத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் படத்திற்கு ‘பீனிக்ஸ் வீழான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சண்டை இயக்குநர் அனல் அரசு இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.


பிரேவ் மேன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ராஜலட்சுமி அரசகுமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பூஜை சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றது.

From around the web