மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டார் வெளியாகி உள்ளது.
ஜவான் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மேரி கிறிஸ்துமஸ்’ படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. தற்போது விடுதலை 2, மகாராஜா போன்ற படங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி, விரைவில் மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிக்கவும் தயாராகி வருகிறார். எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது.
இந்த நிலையில் தற்போது இந்த படம் உறுதி செய்யப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் திரை உலகின் வித்தியாசமான இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘பிசாசு 2’ என்ற படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு ‘ட்ரெயின்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ரயிலில் நடைபெறும் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்காக ரயில் செட் போடப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவிள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த அட்டகாசமான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
. @DirectorMysskin ‘s #Train first look.@theVcreations @fowziafathima @RIAZtheboss @teamaimpr pic.twitter.com/RLmygVvuRI
— VijaySethupathi (@VijaySethuOffl) November 30, 2023
விஜய் சேதுபதி நடித்த 51வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று மலேசியாவில் முடிந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.