பிக் பாஸ் 8வது சீசனின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 
Big Boss

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

விஜய் டிவியில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது பிக்பாஸ். இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரைக்கும் ஏழு சீசன்களாக கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் எட்டாவது சீசனில் இருந்து அவர் விலகினார். அதைத்தொடர்ந்து யார் இந்த சீசனில் தொகுப்பாளராக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

Kamal

இந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக விஜய் டிவி நடிகர் விஜய் சேதுபதி தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்று அறிவித்திருக்கிறது.

விஜய் சேதுபதி ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் கடுமையாக நடந்து கொண்டது எனக்கே விருப்பமில்லை என்று சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சொல்லி இருந்தார். ஆனால் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் தொகுப்பாளராக கலந்து கொள்ளும் போது கமல்ஹாசன் போல இவரும் போட்டியாளர்கள் மனம் கோணாத வகையில் ரசிகர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நிகழ்ச்சியை கொண்டு போவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில் தற்போது வெளியான ப்ரோமோவில் விஜய் சேதுபதி ஒரு பெரிய துணி கடை ஒன்றிற்குள் செல்கிறார். அங்கு ஆண்களுக்கான டிரஸ் எல்லாம் மடித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதில் தொங்கவிடப்பட்டிருக்கும் கோட்டில் ஒன்றை மட்டும் தேர்வு செய்து எடுத்து இருக்கிறார். இது எதை குறிப்பிட்டு இப்படி எடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

Vijay Sethupathi

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரைக்கும் கமல்ஹாசன் விதவிதமான ஆடைகளோடு வந்து பிரபலப்படுத்தி இருக்கிறார். அதே பாதையை விஜய் சேதுபதியும் தொடர்கிறாரா? என்ற கேள்விகள் இருக்கிறது.

From around the web