விவாகரத்தை உறுதி செய்த விஜய் சேதுபதி பட நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகை நிஹாரிகா தன் கணவர் சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளது தெலுங்குத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2016-ல் வெளியான ‘ஓக்க மனசு’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நிஹாரிகா. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படம் மூலம் தமிழிலும் அறிமுகமாகியிருந்தார். 2016 முதல் 2019ம் ஆண்டு வரை ஒருசில படங்களில் மட்டுமே நடித்த நிஹாரிகா, தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சைதன்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அரண்மனையில் நடந்த இவர்களது திருமணத்தில் சிரஞ்சீவி, ராம் சரண், பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். நிஹாரிகாவும் சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே நிஹாரிகாவுக்கும் அவரது கணவர் சைதன்யாவுக்கும் இடையே சிறு சிறு பிரச்சினை இருந்ததாகவும், அதனால் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நிஹாரிகா தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தது. ஆனால், தற்போது இருவருமே சட்ட ரீதியாக பிரிந்துவிட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிஹாரிகா - சைதன்யா இருவரும் பிரிந்ததை தெலுங்கு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.
அதிகாரப்பூர்வமாக விவாகரத்து உறுதியானதும், நடிகை நிஹாரிகா தனது இன்ஸ்டாவில் உள்ள திருமண போட்டோக்களை டெலிட் செய்து விட்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நானும் சைதன்யாவும் பிரிய முடிவெடுத்துள்ளோம். பிரிவையும், புதிய வாழ்வையும் ஏற்க எங்களுக்கு தேவையான ப்ரைவசியை கொடுக்க வேண்டுகிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகளான நடிகை நிஹாரிகா தன் கணவர் சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளது தெலுங்குத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.