விஜய் கல்வி விருது வழங்கும் விழா.. வரும் 17ம் தேதி நடக்கயிருக்கும் பிரமாண்டம்!!

 
Vijay

நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் விழா வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டுள்ளார். இவர், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது.

school

இந்த நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகைய நடிகர் விஜய் வழங்க உள்ளதாக அறிவிக்கப்படது. மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்கள் வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்க, விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

vijay

இந்நிலையில் விருது பெறும் மாணவ, மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் பெற்றோர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அடையாள அட்டை மாவட்ட தலைவர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web