குலதெய்வம் கோவிலில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா.! பக்தியில் மூழ்கிய நயன்! வைரல் வீடியோ

 
Nayan-Viki

தனது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா குலத்தெய்வ கோவிலில் வழிபாடு செய்தார்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் நயன்தாரா அவரது நீண்ட நாள் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த வருடம் வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றனர். திருமணமாகி சில மாதங்களிலேயே குழந்தை பெற்றது பெரிய சர்ச்சை ஆனது.

ஆனால் எங்களுக்கு 5 வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டது என அவர்கள் விளக்கம் தெரிவித்தனர். குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயரிட்டு இருப்பதாக விக்னேஷ் சிவன் ஏற்கனவே கூறி இருந்தார்.

Nayan-Viki

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா தனது மகன்களில் முழு பெயரை அறிவித்து இருக்கிறார். உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என தன் இரண்டு மகன்களின் பெயர்களையும் அவர் அறிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் பங்குனி உத்திர நாளன்று குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகுந்த சிறப்புகளை தரும் என்பதால் இருவரும் கும்பகோணம் அருகே உள்ள மேலவழுத்தூரில் இருக்கும் விக்னேஷ் சிவனின்  குலதெய்வ கோவிலுக்கு இன்று வந்திருந்தனர். 


தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மேலவழுத்தூரில் உள்ள ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோவில்தான் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலாகும். இங்கு வழிபாடு செய்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தவர்கள், பின்னர் அங்கிருந்து கார் மூலம் அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குலதெய்வம் கோவிலில்  நடைபெற்ற உற்சவத்தில் கலந்து கொண்ட விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர்  தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சிறப்பு வழிபாடு நடத்தினர். திருச்சி ஏர்போர்ட் மற்றும் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

From around the web