வெற்றிமாறன் என்னை ஏமாற்றிவிட்டார்.. நடிகர் விஜய் சேதுபதி பரபரப்பு பேச்சு

 
VJS


8 நாள் நடித்தால் போதும் என வெற்றிமாறன் என்னைக் ஏமாற்றிவிட்டார் என் நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க தயாராகி இருக்கும் திரைப்படம் விடுதலை. மேலும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Viduthalai

ஆர்எஸ் இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவில், ராமர் படத்தொகுப்பு செய்ய, பீட்டர் ஹெய்ன் மற்றும் ஸ்டண் சிவா ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றி உள்ளனர். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இயக்குநர் வெற்றிமாறன் உருவாக்கும் இந்த விடுதலை திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இரண்டு பாகங்களாக வெளிவர தயாராகி வருகிறது. 

விடுதலை படத்தின் முதல் பாகம் வருகிற மார்ச் மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், நேற்று இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.


டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, ‘விடுதலை படத்தில் 8 நாள் நடித்தால் போதும் என வெற்றிமாறன் என்னைக் கூப்பிட்டார். ஆனால், 8 நாளும் போட்டா எடுத்து என்னை ஏமாற்றிவிட்டார். ஆடுகளம் இசை வெளியீட்டு விழாவில் பார்வையாளராக அமர்ந்திருந்தேன். அதன்பின், அவர் இந்தப் படத்திற்குதான் இசை வெளியீட்டு விழா வைத்திருக்கிறார். விடுதலை மேடையில் நான் இருக்கிறேன் என நினைக்கும்போது அற்புதமாக உள்ளது. அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. ஒருவேளை வடசென்னை - 2 படத்தில்   நான் இருக்கலாம்’ எனக் கூறினார்.

From around the web