பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Uma Ramanan

பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் நேற்று மாலை உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.

1980-ம் ஆண்டு வெளியான ‘நிழல்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்...’ என்ற பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் உமா ரமணன். அந்த பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து அவருக்கு புகழ் சேர்த்தது. முதல் படத்திலேயே பிரபலம் ஆகி போனார். தொடர்ந்து, எம்.எஸ் விஸ்வநாதன், இளையராஜா, கங்கை அமரன், ஷங்கர் கணேஷ், எஸ்.ஏ ராஜ்குமார், தேவா, வித்யாசாகர், ஸ்ரீகாந்த் தேவா என அனைத்து இசையமைப்பாளர்களுடன் இணைந்து இவர் பாடல்களை பாடி இருக்கிறார் உமா ரமணன்.

Uma Ramanan

புதுமைப்பெண் படத்தில் வரும், கஸ்தூரி மானே கல்யாண தேனே பாடல், கேளடி கண்மணி நீ பாதி நான் பாதி, அரங்கேற்ற வேளை படத்தில் வரும் ஆகாய வெண்ணிலாவே என பல சூப்பர் ஹிட் பாடல்களை அவர் பாடி உள்ளார். இவரது கணவர் ஏவி ரமணனும் இசைத்துறையை சேர்ந்தவர் என்பதால், சினிமா மட்டுமில்லாமல் கணவருடன் சேர்ந்து மேடை பாடல்களை பாடி உள்ளார்.

இந்நிலையில், உமா ரமணன் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிவைலயில் நேற்று காலமானார். அவரது மறைவு இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இசையமைப்பாளர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மனைவி உமா ரமணன் மறைந்தது குறித்து ஏவி ரதணன் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், வணக்கம் நான் ஏவி ரமணன் பேசுகிறேன். என்னுடைய மனைவியான உமா ரமணன் நேற்று மாலை 7.45 மணியளவில், இறைவனடி சென்றார்கள். அவர் இறப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய மகனும் இதை எதிர்பார்க்கவில்லை. இந்த நிகழ்வில் பத்திரிக்கையாளர்கள் மீடியா நண்பர்கள் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட சுதந்திரத்தின் காரணமாக, இது உமா ரமணனின் ஆசை என்று பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

From around the web