பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரவீந்திர மகாஜனி மர்ம மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி!

 
Ravindra Mahajani

பழம்பெரும் மராத்தி பட நடிகர் ரவீந்திர மகாஜனி (77) இறந்து கிடந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல மராத்தி நாடக இயக்குநர் மதுசூதன் கலேல்கரின் ‘ஜனதா அஜந்தா’ என்ற நாடகத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரவீந்திர மாகஜனி. இதனையடுத்து ‘ஜூன்ஜ்’ (Jhunj) என்ற மராத்திய திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக திரைப்படத்தில் அறிமுகமானார். இவரது திரைப்பயணம் 70களின் இடைப்பட்ட காலத்தில் தொடங்கி உள்ளது.

இதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்துள்ள மஹாஜனிக்கு ‘தேவதா’ (Devata) என்ற திரைப்படத்தில் லகான் என்ற கதாபாத்திரம்தான் இன்றளவும் அவரை சினிமா ரசிகர்களின் மனதில் ஆழப் பதிய வைத்து உள்ளது. மேலும், மும்பைச்சா ஃபஜுதார் (1984), கலாத் நகாலட் (1990), லட்சுமி, கோந்தாலத் கோந்தல் மற்றும் ஹல்டி குன்கு ஆகிய திரைப்படங்கள் இவரது நடிப்பில் இன்றளவும் பேசப்படுகின்ற திரைப்பட பட்டியலில் இடம் பெற்று உள்ளன.

Ravindra Mahajani

மேலும், தற்போதைய மராத்தி நடிகரும், இவரது மகனுமான காஷ்மீர் மகாஜனி உடன் இணைந்து ‘பானிபட்’ (Panipat) என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார். இந்த படத்தில் அர்ஜுன் கபூர் மற்றும் கிரித்தி சனோன் ஆகியோர் முன்னணி நடிகர்களாக நடித்து உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதன் பிறகு அவர், புனே மாவட்டம் மாவல் தாலுகாவில் உள்ள அம்பி என்ற கிராமத்தில் இருக்கும் சொசைட்டி வீட்டில் வசித்து வந்து உள்ளார். இதனையடுத்து, அவர் வசித்து வந்த வீட்டின் கதவு திறக்கப்படாமலே இருந்து உள்ளது.

அது மட்டுமல்லாமல், ரவீந்திர மகாஜனியின் வாடகை வீட்டில் வசித்து வரும் நபர்களுக்கு துர்நாற்றமும் வீசத் தொடங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உள்ளே சென்று பார்த்தபோது, ரவீந்திர மகாஜனி உயிரிழந்த நிலையில் கிடந்து உள்ளார்.

RIP

தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பின்னர், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நடிகர் ரவீந்திர மகாஜனி உடை மாற்றும்போது உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவரது மறைவு செய்தி திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரையுலகினர் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web