பழம்பெரும் நடிகை காலமானார்.. திரையுலகில் தொடரும் சோகம்!

 
Bhairavi Vaidya

பிரபல பாலிவுட் நடிகை பைரவி வைத்யா புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 67.

நடிகர் சல்மான் கானின் ‘சோரி சோரி சுப்கே சுப்கே’ மற்றும் ஐஸ்வர்யா ராயின் ‘தால்’ ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்பட்ட பழம்பெரும் நடிகர் பைரவி வைத்யா. இவர் இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இதுதவிர, குஜராத்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார். அவர் ஹஸ்ரடீன் மற்றும் மஹிசாகர் ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

Bhairavi Vaidya

கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நடிகை பைரவி வைத்யா, கடந்த 8-ம் தேதி காலமானார். 

இதையடுத்து, அவரது சக நடிகையான சுரபி தாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “அவர் இறந்த செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். நான் அவருடன் செட்களில் சிறந்த நேரத்தை பகிர்ந்து கொண்டேன்.” என்றார்.


நடிகை பைரவியின் மறைவுக்கு CINTAA இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில், “பைரவி வைத்யா (2005 முதல் உறுப்பினர்) மறைவுக்கு CINTAA தனது இரங்கலைத் தெரிவிக்கிறது.” நடிகர் பிரதிக் காந்தியும் அவரை ஒரு பாசமுள்ள நபராக நினைவு கூர்ந்தார், அவருடன் வென்டிலேட்டர் என்ற குஜராத்தி திரைப்படத்தில் திரையைப் பகிர்ந்து கொண்டார்.

From around the web