பிரபல பழம்பெரும் நடிகை காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி!
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகையான சிஐடி சகுந்தலா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84.
1960-ல் வெளியான ‘கைதி கண்ணாயிரம்’ படத்தின் மூலம் நடனக் கலைஞராக சினிமாவிற்கு அறிமுகமானவர் ஏ.சகுந்தலா. தொடர்ந்து 1970-ல் ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ‘சிஐடி சங்கர்’ படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பெருமளவு வரவேற்பை பெற, அதன் பிறகு சிஐடி சகுந்தலா என்று அழைக்கப்பட்டார்.
அப்போதைய முன்னணி நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிப்பிலிருந்தும் விலகி பெங்களூருவில் இருக்கும் மகள் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக சிஐடி சகுந்தலா காலமாகியுள்ளார். இவரது மறைவு திரை பிரபலங்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரை பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிஐடி சகுந்தலாவின் இறுதி சடங்குகள் இன்று மாலை நடக்கவிருக்கிறது.