பழம்பெரும் நடிகை காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!

 
Subbalakshmi

பழம்பெரும் நடிகையும் இசைக்கலைஞருமான சுப்பலட்சுமி நேற்று காலமானார். அவருக்கு வயது 87.

2002-ல் வெளியான ‘நந்தனம்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் சுப்பலட்சுமி. அதனைத் தொடர்ந்து கல்யாணராமன், குளுஜூம், பாண்டிபடா, சிஐடி மூசா, சவுண்ட் தோமா, கூத்தாரா, பிரணயா கதா, சீதா கல்யாணம், ஒன்று, ராணி பத்மினி உள்ளிட்ட சுமார் 70 மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.

Subbalakshmi

இவர், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். கல்யாண ராமுடு, யா மாயா சேசாவே, ஏக் தீவானா தா, தில்பேச்சாரா, ராமன் பீகிய சீதை, ஹவுஸ் ஓனர், மிருகம், ஹோகனாசு, மதுரமிதம், கடவுளின் பெயரில் மற்ற மொழி படங்களைகளிலும் நடித்துள்ளார். தமிழில் ஒரு பொன்னு ஒரு பையன், ராமன் தேடிய சீதை, விண்ணைதாண்டி வருவாயா, அம்மானி, பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக நடிகை சுப்பலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (நவ. 30) காலமானார். 1951-ம் ஆண்டு முதல் அகில இந்திய வானொலியில் பணியாற்றி வந்த இவர், தென் இந்தியாவில் அகில இந்திய வானொலியின் முதல் பெண் இசையமைப்பாளர் ஆவார். இவர், பிரபல நடிகரும் நடனக் கலைஞருமான தாரா கல்யாணின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

RIP

அவரது பேத்தி சவுபாக்யா வெங்கடேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மறைவை அறிவித்தார். “நான் அவளை இழந்தேன். 30 ஆண்டுகள் என் வலிமை மற்றும் அன்பு. என் அம்மாம்மா, என் சுப்பு, என் குழந்தை. பிரார்த்தனைகளுக்கு நன்றி ”என்று அவர் மருத்துவமனையில் இருந்து ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டார். இவரது மறைவு திரை உலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web