பழம்பெரும் நடிகர் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
brijesh tripathi

பழம்பெரும் போஜ்புரி நடிகர் பிரிஜேஷ் திரிபாதி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 72.

1979-ல் வெளியான ‘சயா தோஹரே கரன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரிஜேஷ் திரிபாதி. 1980-ல் வெளியனா ‘டாக்ஸி சோர்’ படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். ‘ஓம்’ படத்தில் நடித்தன் மூலம் புகழ் பெற்றார். இவர், ‘நோ என்ட்ரி’, ‘குப்தா: தி ஹிடன் ட்ரூத்’, ‘தேவ்ரா பைல் தீவானா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

brijesh tripathi

இவர், இந்தி மற்றும் போஜ்புரியின் பல பெரிய நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். அமிதாப் பச்சன், தர்மேந்திரா, வினோத் கண்ணா, அஜய் தேவ்கன், ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். பாலிவுட்டில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் பிரிஜேஷ் திரிபாதி கடந்த இரண்டு வாரங்களாக டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், மீரட்டில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்த பின்பு அவர் மும்பைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால், நேற்று இரவு மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

RIP

மாரடைப்பு ஏற்பட்டதும் பிரிஜேஷ் திரிபாதி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. இவரது மறைவுச் செய்தியால் போஜ்புரி திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பிரிஜேஷ் திரிபாதியின் மறைவுக்கு ரவி கிஷன் உட்பட பல பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

From around the web