பிரபல நடிகர் கங்கா மாரடைப்பால் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி!

 
Ganga

பிரபல நடிகர் கங்கா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 63.

1983-ல் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ‘உயிருள்ள வரை உஷா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கங்கா. அவரின் முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. இதைத் தொடர்ந்து கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களிடையே வரவேற்பை பெற்றார்.  

Ganga

தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர்.  மிகவும் எதார்த்தமான நடிப்பால்  ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். அதன்பிறகு சில சின்னத்திரை தொடர்களிலும் அவர் நடித்து வந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். தற்போது சகோதரர் குடும்பத்துடன் நடிகர் கங்கா வசித்து வந்தார்.

இந்நிலையில் தான் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இன்று மரணமடைந்தார். இவரது இந்த மரணம் தமிழ் திரையுலகினரையும், அவரது ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

RIP

நடிகர் கங்காவின் சொந்தஊர் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமம் ஆகும். இதனால் நாளை அவரது உடல் சிதம்பரம் எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குகளுக்கு பிறகு தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு திரையுலகத்தை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் நாளை அஞ்சலி செலுத்த உள்ளனர்.

From around the web