நாளை வெளியாக இருந்த வீர தீர சூரன் படத்திற்குத் தடை..
Mar 26, 2025, 20:22 IST

விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் படத்தை வெளியிடுவதற்கு டெல்லி நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் இரண்டு பாகமாக உருவாகியுள்ள படத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளியாக இருந்த நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரையை மையமாகக் கொண்டு, ஒரு இரவில் நடக்கும் அதிரடி நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். விக்ரம் நடிப்பில் வெளியாகும் 62 வது படம் இது.
படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.கல்லூரும்" என்ற முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி வைரலாகியுள்ளது.