வருண் தேஜ் - லாவன்யா திரிபாதி திருமண நிச்சயதார்த்தம்.. ரசிகர்கள் வாழ்த்து!

 
Lavanya - Varun Tej

நடிகை லாவண்யா திரிபாதிக்கும் தெலுங்கு இளம் நடிகர் வருண் தேஜூக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

2012-ல் வெளியான ‘அந்தலா ரக்சாசி’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிபாதி. அதன்பின், தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான ‘பிரம்மன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மாயவன் படத்திலும் நடித்து இருந்தார். தற்போது தணல் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

இதனிடையே, இவருக்கும் தெலுங்கு இளம் கதாநாயகன் வருண் தேஜூம் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் 'மிஸ்டர்', 'அந்தாரிக்சம்' ஆகிய படங்களில் சேர்ந்து நடித்த இருந்தனர். அப்போது இருவரும் காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது.

Lavanya - Varun Tej

இந்த நிலையில் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமணம் விரைவில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. வருண் தேஜின் தந்தையும் நடிகருமான நாகபாபு, “திருமண விஷயத்தை வருண் தேஜே அறிவிப்பார். திருமணம் முடிந்ததும் மணமக்கள் தனி குடித்தனம் சென்றுவிடுவார்கள்” என்று கூறியிருந்தார்.

யாரும் எதிர்பாராத வகையில் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமண நிச்சயதார்த்தம் சத்தமே இல்லாமல் நேற்று நடந்து முடிந்தது. ஐதராபாத்தில் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய குடும்பத்தினரும் மட்டுமே பங்கேற்றனர்.


நிச்சயதார்த்தம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே இத்தகவல் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி ஜோடிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

From around the web