தாய்லாந்தில் முடிந்த வரலட்சுமியின் திருமணம்.. வெளியான புகைப்படங்கள்

 
Varalaxmi

நடிகை வரலட்சுமி சரத்குமார் - நிக்கோலாய் சச்தேவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

2012-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. இப்படத்தில் இவரின் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல அடையாளத்தை பெற்று தந்தது.

அதனைத் தொடர்ந்து விக்ரம் வேதா, மாரி-2, கன்னிராசி, பாம்பன், நீயா-2, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், மிஸ்டர் சந்திரமௌலி, சண்டக்கோழி-2, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக தெலுங்கில் வெளியான ‘ஹனுமான்’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராயன்’ படத்தில் நடித்துள்ளார்.

Varalaxmi

இந்நிலையில், வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ்வுக்கும் கடந்த மார்ச் மாதம் மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் நிக்கோலாய்யை வரு இரண்டாவது திருமணம் செய்து கொள்வது குறித்த விமர்சனங்கள் எழுந்த போதும், அதற்க்கு தக்க பதிலடியும் கொடுத்தார். எனினும் இப்போது வரை வரு பணத்திற்கு ஆசை பட்டு தான் இந்த திருமண உறவில் இணைவதாக சிலர் அவ்வப்போது கொள்ளுதி போட்டு வருவது வழக்கமாக உள்ளது.

வரலட்சுமி சரத்குமாரின் திருமண கொண்டாட்டம் 5 நாள் நடைபெற்றது. இதில் சென்னையில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஹல்தி, மெஹந்தி, போன்றவை நடத்தப்பட்டது. பின்னர் தாய்லாந்தில் திருமணமும், வரவேற்பும் நடந்ததை தொடர்ந்து, மீண்டும் சென்னையில் உள்ள லீலா பேலஸில் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்ட ரிசப்ஷன் நடந்தது.

ஒரு சில சினிமா விமர்சகர்கள், வரலட்சுமிக்கு தாய்லாந்தில் திருமணம் நடைபெறவில்லை. சென்னையில் தான் நடைபெற்றது என கூறினர். ஆனால் சில தினங்களுக்கு முன், பிரைவேட் விமானம் மூலம் வரலட்சுமியின் ஒட்டு மொத்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தாய்லாந்த் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோஸ் சிலவற்றை வெளியிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து, வரலட்சுமி சரத்குமாரின் திருமண புகைப்படங்கள் மற்றும் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ராதிகாவின் மகள் ரேயான் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

From around the web