‘வாரிசு’ பட தயாரிப்பாளர் தில் ராஜுவின் தந்தை மரணம்.. திரையுலகினர் இரங்கல்!

 
Dil raju

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் தந்தை ஷியாம் சுந்தர் ரெட்டி நேற்று காலமானார். அவருக்கு வயது 86.

2003-ல் வெளியான ‘தில்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் தில் ராஜு. தொடர்ந்து ஆர்யா, பத்ரா, பொம்மரில்லு, பருகு, பிருந்தாவனம், சதமானம் பவதி உள்ளிட்ட பல தெலுங்கு படங்களை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Dil Raju Parents

தற்போது ’கேம் சேஞ்சர்’ என்ற படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நாயகனாக ராம் சரண் நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், அஞ்சலி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

RIP

இந்த நிலையில், தில் ராஜுவின் தந்தை ஷியாம் சுந்தர் ரெட்டி சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே நேற்று இரவு அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று தெரிகிறது.

From around the web