ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்.. என்னவாக இருக்கும்?
Jun 30, 2025, 17:40 IST

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திருவள்ளூரில் தொடங்கியுள்ள புதிய ஸ்டுடியோவிற்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் சென்று ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்து பேசியுள்ளார்.
பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவ்வப்போது கருத்துகளை பகிர்ந்து வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரை ஒன்றிய இணை அமைச்சர் சந்தித்துப் பேசியது திரையுலகிலும் அரசியல் வட்டாரத்தலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை மீனா பாஜகவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி வரும் வேளையில் இந்த சந்திப்பு சில எதிர்பார்ப்புகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாஜக அரசு தரப்பில் ஏதேனும் அழுத்தம் தரப்படுகிறதா என்ற கேள்விகளும் இயல்பாகவே எழுகிறது.
இது வெறும் மரியாதை நிமித்தமான, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தூண்டில் போடும் சந்திப்பாகக் கூட இருக்கலாம்.