ஒரே நிறுவனத்திற்கு இரண்டு படங்கள்... தனுஷ் முடிவு!!
Apr 21, 2025, 18:26 IST

தொழிலதிபரும் நடிகருமான ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனத்திற்கு இரண்டு படங்கள் ஒப்புக் கொண்டுள்ளார் நடிகர் தனுஷ். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். மாரி செல்வராஜ் பைசன் படத்தை இயக்கி வருகிறார். அதை முடித்து விட்டு தனுஷ் படத்தை இயக்க உள்ளார்.
இந்தப் படத்திற்கு முன்னதாக, வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் மற்றுமொரு படத்தில் நடிக்க உள்ளார் என்று ஐசரி கணேஷ் கூறியுள்ளார்.இந்தப் படத்தை போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது/