சுந்தர்.சி படத்திற்கு சிக்கல்.. பொங்கல் ரேஸில் இருந்து விலகிய அரண்மனை 4?

 
Aranmanai 4

பொங்கலுக்கு அதிக தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதால் ரிலீஸை தள்ளி வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2014-ல் சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘அரண்மனை’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சித்தார்த் நடித்திருந்தார். 2021-ம் ஆண்டு இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியானது. ஆர்யா, ராஷிகண்ணா, சாக்‌ஷிஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஹாரர் - காமெடி ஜானரில் சீரிஸாக வெளியாகும் இப்படத்தின் நான்காவது பாகத்துக்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. இந்தப் படத்தையும் சுந்தர்.சி இயக்குகிறார். இந்த படம் அவருடைய 25வது படமாகும். இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Aranmanai 4

இந்த சூழலில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான தகவலின்படி, ‘அரண்மனை 4’ படம் வருகின்ற 2024-ம் ஆண்டு பொங்கல் திருவிழா அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது அதிகாரப்பூர்வமாக வெளியான தகவல் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் நடிகர் சுந்தர்.சி-யை பொருத்தவரை தன்னுடைய திரைப்படங்களை இயக்குவது, நடிப்பது என்பதை தாண்டி அதை திரையில் வெளியிடுவதையும் கணக்கிட்டு வெளியிடுபவர்.

ஏற்கனவே வெளியான அவருடைய அரண்மனை திரைப்படத்தின் மூன்று பாகங்களும் பெரிய அளவில் போட்டியின்றி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த முறை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகவுள்ள அரண்மனை 4 திரைப்படத்திற்கு மிகப்பெரிய போட்டி நிலவுகிறது.

Aranmanai 4

குறிப்பாக தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்மஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ள நிலையில் இது அரண்மனை  படத்தின் நான்காம் பாக வசூலை பாதிக்குமோ என்ற நோக்கத்தில் தற்பொழுது பொங்கல் போட்டியில் இருந்து அரண்மனை 4ம் பாகம் விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

From around the web