விரைவில் ஓடிடியில் வெளியாகும் திரிஷா நடித்த ‘தி ரோடு’ படம்!!

 
The Road

திரிஷா நடிப்பில் வெளியாகி உள்ள ‘தி ரோடு’ படம் ஆஹா ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் தேதி அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அருண் வசீகரன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தி ரோடு’. இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப், டான்சிங் ரோஸ் ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த 2000-ம் ஆண்டின் துவக்கத்தில் மதுரையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

The Road

திரிஷா தனது ரீ என்ட்ரி மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் மற்றும் பெரிய ஹீரோக்களின் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்த வாரம் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள தி ரோடு படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்றாலும் நிறைய லாஜிக் ஓட்டைகள்  உள்ளது என்று ரசிகர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டு வரும் படம் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. 

The Road

இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை ஆஹா தளம் பெற்றுள்ளதாகவும் விரைவில் ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

From around the web