சம்பளத்தில் நயனை முந்திய த்ரிஷா.. அடேங்கப்பா இத்தனை கோடிகளா?

 
Trisha - Nayanthara

லியோ படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக ஆகியிருக்கிறார் த்ரிஷா.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 1999-ம் ஆண்டு மிஸ் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அதே ஆண்டு வெளியான ‘ஜோடி’ படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, அமீர் இயக்கதில் வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தனக்கென தனி முத்திரை பதித்துள்ள த்ரிஷாவிற்கு வயது 40-ஐ நெருங்கினாலும் இளமை குறையாமல் அதே அழகுடன் இருக்கிறார். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

Trisha

தனது திரைவாழ்க்கையின் தொடக்கத்தில் லட்சங்களில் சம்பளம் வாங்கிய இவர், அடுத்தடுத்து கிடைத்த வெற்றிகளால் சம்பளத்தை கோடிகளுக்கு உயர்த்தியிருந்தார். ஆனால், இடையில் சினிமா பயணத்தில் சிறு தொய்வு ஏற்பட்டாலும், பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்து மீண்டும் கவனம் ஈர்த்திருந்தார். அதனைத்தொடர்ந்து, நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்த த்ரிஷா, லியோ படத்தில் சத்யாவாக கலக்கினார். இந்த படத்திற்கு 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விடாமுயற்சி, தக்லைஃப் போன்ற படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிக்கும் தக்லைஃப் படத்தின் ஹீரோயின் த்ரிஷா என்பது அனைவருக்கும் தெரியும். அந்த தக்லைஃப் படத்தில் நடிக்க த்ரிஷாவுக்கு ரூ. 12 கோடி சம்பளம் பேசியிருக்கிறார்கள்.

Trisha-Kamal

இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை என்கிற பெருமையை பெற்றிருக்கிறார் த்ரிஷா. இத்தனை ஆண்டுகளாக அந்த பெருமைக்குரியவராக இருந்தவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. 40 வயதில் ரூ. 12 கோடி சம்பளம், தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகள். இது எல்லாம் எங்கள் தலைவி த்ரிஷாவுக்கு தான் நடக்கும். அவர் அழகி மட்டும் நல்ல திறமையான நடிகையும் கூட. அவர் இத்தனை ஆண்டுகளாக பொறுமையாக காத்திருந்தது வீண் போகவில்லை என த்ரிஷா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

From around the web