17 வருடங்களுக்கு பிறகு மாஸ் ஹீரோவுடன் இணையும் த்ரிஷா!

 
Trisha

17 ஆண்டுகளுக்கு பிறகு மாஸ் ஹீரோ நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 1999-ம் ஆண்டு மிஸ் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அதே ஆண்டு வெளியான ‘ஜோடி’ படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, அமீர் இயக்கதில் வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தனக்கென தனி முத்திரை பதித்துள்ள த்ரிஷாவிற்கு வயது 40-ஐ நெருங்கினாலும் இளமை குறையாமல் அதே அழகுடன் இருக்கிறார். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

Vijay - Trisha

தற்போது விஜய்க்கு ஜோடியாக ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரை தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19-ம் தேதி வெளியாகவுள்ளது. 

அதேபோல் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’விடாமுயற்சி’ படத்தில் த்ரிஷா தான் நாயகி என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 50 வயதை கடந்த பிறகு ஒரு குழந்தைக்கு ஹீரோ தந்தையாகும் நிலையில் அவரது மகனும் தந்தை ஆகிறார் என்றும் இதுதான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

Trisha

மலையாளத்தில் மோகன்லால், பிருத்விராஜ் தந்தை மகனாக நடித்த நிலையில் சிரஞ்சீவி தந்தை கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவரது மனைவியாக த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. மகனாக நடிக்கும் நடிகரின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ’ஸ்டாலின்’ என்ற திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து இருந்த நிலையில் தற்போது 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவர் சிரஞ்சீவுக்கு ஜோடியாக நடிக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web