கமல்ஹாசன் படத்தில் இணைந்த த்ரிஷா.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

 
KH234

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் ‘KH234’ படத்தில் த்ரிஷா நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். இந்தப் படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கமல்ஹாசன் - மணிரத்னம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ‘KH234’ படத்தின் ப்ரொமோ வீடியோ இன்று (நவ. 6) மாலை வெளியானது. இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் 2 நாட்கள் நடைபெற்றது.

KH234

இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளதாக ராஜ்கமல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான போஸ்டர்களையும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. முன்னதாக இன்று வெளியாகவிருக்கும் அறிவிப்பு வீடியோவுக்கான போஸ்டர் ஒன்றையும் படக்குழு பகிர்ந்திருந்தது. 


அதில், தலை முழுவதும் மூடப்பட்டு கமல்ஹாசனின் கண்கள் மட்டும் தெரியும் வகையில் இடம்பெற்றுள்ள புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது. மேலும், அந்தப் போஸ்டரில் “காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்” என்ற வரிகள் எழுதப்பட்டுள்ளன. இன்று மாலை இப்படத்தின் தலைப்பையும் படக்குழு அறிவித்துள்ளது.

From around the web