த்ரிஷா அரசியலுக்கு வரப்போவதில்லையாம்! அம்மாவே சொல்லிட்டாங்க!!

நடிகை த்ரிஷா நடிப்பைத் தொடர்வார், அரசியலுக்கு வரப்போவதில்லை என்று நடிகை த்ரிஷாவின் அம்மா தெரிவித்துள்ளார். மௌனம் பேசியதே படத்தில் அறிமுகமானாலும் விஜய் யுடன் கில்லி படத்தில் நடித்த பிறகு த்ரிஷா திரையுலகில் உச்ச நாயகியாக உருவெடுத்தார். சாமி படத்தின் உச்ச நடிகை ஆகவும் ஆகிவிட்டார்.
இடையில் படங்கள் சரிவர இல்லாத நிலையில் பொன்னியின் செல்வன் மூலம் மீண்டும் பரப்பரபான நடிகை ஆகிவிட்டார்.விஜய் யுடன் மீண்டும் லியோ படத்திலும் கோட் படத்திலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில், கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு தனி விமானத்தில் நடிகர் விஜய் யுடன் கோவாவுக்கு சென்ற போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விஜய் கட்சியில் சேர்ந்து கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆகிவிடுவார் என்று பேசப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா போல் விஜய் க்கு த்ரிஷா என்றெல்லாம் விஜய் ரசிகர்கள் பேசத்தொடங்கி விட்டனர்.
இந்நிலையில் த்ரிஷா படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் இறங்கப்போவதாக செய்திகள் அடிபட்டது. இப்போது த்ரிஷாவின் அம்மா இது குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார்.