தொடரும் சோகம்.. ஆஸ்கார் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Ryuichi Sakamoto

பிரபல ஜப்பானிய இசையமைப்பாளர் ரியுச்சி சகாமோட்டோ காலமானார். அவருக்கு வயது 71.

பிரபல ஜப்பானிய இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ரியுச்சி சகாமோட்டோ. இவர் ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் 1987-ல் வெளியான ‘தி லாஸ்ட் எம்பரர்’ படத்துக்கு இசையமைத்துள்ளார். அந்தப் படத்திற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கார் விருதை வென்று சாதனை படைத்திருக்கின்றார்.

Ryuichi Sakamoto

மேலும், ‘மேரி கிறிஸ்துமஸ், மிஸ்டர் லாரன்ஸ்’ படத்துக்கு இசையமைத்தமைக்காக பாப்டா விருதையும் வென்றிருக்கின்றார். கிராமிய விருதும் பெற்றுள்ளார். மேலும் ஏராளமான படங்களுக்கு பின்னணி இசையமைத்ததோடு இசை ஆல்பங்களும் வெளியிட்டு உள்ளார். 

RIP

இந்த நிலையில் ரியுச்சி சகாமோட்டோவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளர். இவரது மறைவிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web