திரையுலகில் தொடரும் சோகம்.. பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிரச்சி!

 
Allu Ramesh

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு ரமேஷ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 52.

தெலுங்கு படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் அல்லு ரமேஷ். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தை சேர்ந்த இவர், நாடகத் துறை மூலம் திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2001-ல் வெளியான சிருஜல்லு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 

Allu Ramesh

அதனைத் தொடர்ந்து ‘டோலு பொம்மலடா’, ‘மதுரா ஒயின்ஸ்’, ‘வீதி’, ‘பிளேட் பாப்ஜி’, ‘நெப்போலியன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2015-ல் வெளியான ‘கெரிந்த’ படத்தில் நுகராஜின் தந்தையாக நடித்தார். 2022-ல் வெளியான ராஜேந்திர பிரசாத்தின் ‘அனுகோனி பிரயாணம்’ அவரது கடைசி படமாக அமைந்தது.

இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது அல்லு ரமேஷுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர். 

RIP

இந்த நிலையில் அல்லு ரமேஷ் மறைவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தெலுங்கு இயக்குநர் ஆனந்த் ரவி, “ஆரம்பத்தில் இருந்து எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறீர்கள். உங்கள் குரல் எனக்கு இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. உங்கள் மறைவை ஏற்க முடியவில்லை ரமேஷ். என்னைப் போல நிறைய இதயங்களை கவர்ந்திருக்கிறீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

From around the web