திரைத்துறையில் தொடரும் சோகம் ! இளையராஜாவின் ஹிட் பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசித்த இசை கலைஞர் மறைவு..!

 
sudhakar

பிரபல புல்லாங்குழல் இசை கலைஞர் சுதாகர் காலமானார்.

இசைத்துறையில் தற்போது வரை முன்னணி கலைஞராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. 80s, 90s கிட்ஸ்களை வெகுவாக தனது இசையின் மூலம் கவர்ந்த இவர், இன்று இருக்கும் பல இசை கலைஞர்களையும் அறிமுகப்படுத்தினார். அந்த வகையில் இளையராஜா இசையில் உருவான பல ஹிட் பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசித்து வந்தவர்தான் சுதாகர். 

Sudhakar

1977-ல் வெளியான ‘கவிக்குயில்’ படத்தில் இருந்தே இவர் இளையராஜாவுடன் பணிபுரிந்து வந்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’, 'இளையநிலா பொழிகிறதே', 'அழகிய கண்ணே', 'புத்தம்புது காலை', 'பனிவிழும் மலர்வனம்' என பல பாடல்களுக்கு அவரது புல்லாங்குழல் மெருகூட்டியிருக்கும்.

‘பத்ரகாளி’ படத்தில்தான் அவர் முதன்முதலில் இளையராஜாவுடன் கைகோத்தார். அதற்கு முன்னர் இளையராஜாவின் குரு ஜி.கே.வெங்கடேஷிடம் பணியாற்றினார். சினிமா பாடல்கள் மட்டுமல்ல இளையராஜாவின் ‘ஹவ் டூ நேம் இட் இசை’ ஆல்பங்களிலும் சுதாகர் புல்லாங்குழல் வாசித்திருப்பார். இளையராஜா இசைக் குழுவில் புல்லாங்குழல் வாசிக்க அருன்மொழி இணையும் வரை சுதாகர் அந்தக் குழுவில் இருந்தார். சுதாகர் மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

RIP

சுதாகர் பற்றி பிரபல கிட்டர் இசைக் கலைஞர் சதா மாஸ்டர் கூறுகையில், “சுதாகாரின் நினைவாற்றல் அபரிமிதமானது. அவர் எல்லா பாடல்களுக்கான மெட்டையும் தன் மனதில் வைத்திருப்பார். நோட்ஸ் எல்லாம் அவருக்குக் கொடுக்க வேண்டாம். நினைவிலிருந்தே எல்லா பாடல்களையும் இசைப்பார். அதுமட்டுமல்ல மொத்த குழுவினரையும் அவர் கலகல பேச்சால் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். அவரது மறைவால் வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

From around the web