நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு டார்ச்சர்.. வதந்திக்கு இன்ஸ்டா பதிவு மூலம் முற்றுப்புள்ளி வைத்த நடிகை!

 
Krithi-Shetty

பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டியை திரையுலக பிரபலம் டார்ச்சர் செய்ததாக தகவல் வெளியானது அதற்கு இவர் பதிலளித்துள்ளார்.

2019-ல் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான ‘சூப்பர் 30’ என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. அதன்பின் 2021-ல் வெளியான ‘உப்பெனா’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘கஸ்டடி’ படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Genie

தெலுங்கில் அறிமுகமான சில வருடங்களிலேயே முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை கீர்த்தி ஷெட்டி, தற்போது தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ஜீனி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் இவர் நடிக்கும் முதல் நேரடி தமிழ்ப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பிரபல நடிகரின் மகன் ஒருவர் வருவதாகவும், அவர் செல்லும் இடங்களுக்கு நடிகையை வரச் சொல்லி லவ் டார்ச்சர் கொடுத்து வருவதாக சில நாட்களாக கிசுகிசுக்களும் கிளம்பியது. இதனை இவர் கண்டுகொள்ளாமல், இந்த கிசுகிசுக்கு பதிலளிக்காமல் இருந்த்து வந்தார்.

Krithi Shetty

இது வேகமாக பரவி வந்த நிலையில், இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி உண்மையை உடைத்து பேசியுள்ளார். மேலும், அந்த பதிவில், “இது முற்றிலும் ஆதாரம் இல்லாத வதந்தி, என்னை எந்த நடிகரின் மகனும் அப்படி டார்ச்சர் செய்யவில்லை. இதுவரை இதை கண்டுக்கொள்ளாமல் தான் இருந்து வந்தேன். இந்த தகவல் பெரிதாக வெடித்ததால் தற்பொழுது பதிலளித்துள்ளேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.

From around the web