வைரலாகும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி.. அதிரடியாக களமிறக்கப்பட்ட வடிவேலு!

 
Vadivelu

சன் டிவியில் வெங்கடேஷ் பட் நடுவராக நடத்தும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு கலந்துகொள்ளும் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராக கலக்கி வந்தவர் வெங்கடேஷ் பட். தற்போது அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்கிற பெயரில் தொடங்கப்பட்டுள்ள புது சமையல் நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் நடுவராக பங்கெடுத்து உள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்கு சீசன்களை தயாரித்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் தான் தற்போது தயாரித்து வருகிறது.

பெரிய அளவில் எதிர்பார்ப்போடு இருந்த டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி மே 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் டாப் குக்காக பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் பெப்சி விஜயன், சாய் தீனா, சோனியா அகர்வால், சுஜாதா சிவகுமார், சிங்கம்புலி, ஐஸ்வர்யா தத்தா, ஷாலிநிவாஸ், நரேந்திர பிரசாத், சைத்ரா ரெட்டி ஆகிய 9 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களோடு டூப் குக்காக தீபா, அதிர்ச்சி அருண், பாரத், தீனா, மோனிஷா, ஜிபி முத்து, விஜய், முகுந்த், சௌந்தர்யா, கதிர் ஆகிய 9 டூப் குக்குகளும் இருக்கின்றனர். இவர்கள் மூன்று அணியாக பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை வழி நடத்துவதற்காக மூன்று செஃப் அறிமுகமாகி இருக்கிறார்கள். இந்த மூன்று செஃப்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று டாப் குக்குகளை வைத்து சமைக்கப்படும் போது டாப் குக்குகள் எலிமினேஷன் ஆகி வெளியே போகும்போது அவர்களுக்கு ட்ரைனிங் கொடுத்த செஃப்களும் எலிமினேஷன் செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

Vadivelu

இது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட வித்தியாசமாக இருக்கிறது. அதே நேரத்தில் நேற்று நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே கலகலப்பு மற்றும் விறுவிறுப்பு அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வெல்லும் போட்டியாளருக்கு 20 லட்சம் பரிசு என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது போட்டியாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

அந்த வகையிலேயே நிகழ்ச்சி முடிவடைந்ததும் ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நடிகர் வடிவேலு வந்திருக்கிறார். அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறாரா? அல்லது நடுவராக தொடர போகிறாரா? என்பது பிறகு தான் தெரியவரும். அதே நேரத்தில் நேற்று வெளியான பிரமோவில் வெங்கடேஷ் பட், வைகைப்புயல் திரு வடிவேலு அவர்கள் தமிழ் சினிமாவில் மாபெரும் ஆளுமை வருக வருக என்று மாலை போட்டு வரவேற்க நிகழ்ச்சிக்கு வந்த வடிவேலு இந்த நிகழ்ச்சிக்கான டைட்டில் ரொம்ப அருமையா இருக்கு என்று சொல்கிறார்.

அதற்கு வெங்கடேஷ் பட்டு நீங்க வந்ததுதான் அதற்கு ஒரு அஸ்திவாரமா இருக்க போகுதுன்னு நான் சொல்றேன். உங்க முகத்துக்கு எதிரா நான் பாராட்ட கூடாது அதற்காக உங்களுக்கு முதுகுக்கு பின்னாடி போய் பாராட்டுவேன் என்று பேசப் போகிறார். பிறகு வடிவேலு போட்டியாளர்களை கிளப்புங்கள் என்று சமைக்க சொல்கிறார். அதைத் தொடர்ந்து போட்டியாளர்கள் காரச்சேவு செய்து கொண்டிருக்கின்றனர். 

Vadivelu

அப்போது அங்கு வரும் வடிவேலு பரத்திடம் இதை சாப்பிட்டா உயிருக்கு எதுவும் ஆபத்து வருமா என்று கேட்க, அதற்கு பரத் சாப்டா தெரிஞ்சிடும் என்று சொன்னதும் வடிவேலு உயிர் இருக்கா இல்லையானா என்று கவுண்டர் கொடுக்கிறார். அதை தொடர்ந்து சைத்ராவுடன் மோனிஷா சமைத்துக் கொண்டிருக்கும் இடத்திற்கு வரும் வடிவேலு இது என்னது என்று கேட்க அதற்கு மோனிஷா ரோஸ் என்று கோவை சரளா போல பேச அவரை அடிக்க குச்சியை தேடுகிறார்.

அடுத்த கட்டத்தில் வெங்கடேஷ் பட் தோளில் "கைய போட்டு கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்" என்று சொல்லி இருவரும் மாறி மாறி கட்டி அணைத்துக் கொள்கின்றனர். இந்த பிரமோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்த்ததும் ரசிகர்கள் வடிவேலுவின் இந்த கவுண்டர் அருமையாக இருக்கிறது இதை நாங்க முழுமையாக பார்க்க அடுத்த வாரம் வரைக்கும் காத்திருக்க வேண்டுமா என்று ஏக்கத்தோடு கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

From around the web