வில்லியாக நடிக்க விரும்பும் பிரபல டாப் நடிகை.. மெரி கிறிஸ்துமஸ் பட விழாவில் மனம் திறந்த கத்ரினா!

 
Katrina Kaif

எனக்கு வில்லி கேரக்டர்களில் நடிக்க ஆசையாக உள்ளது என்று நடிகை கத்ரீனா கைஃப் தெரிவித்துள்ளார்.

2003-ம் ஆண்டு வெளியான ‘பூம்’ படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் கத்ரீனா கைஃப். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘மெரி கிறிஸ்மஸ்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன.

Katrina kaif

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கத்ரீனா கைஃப், ‘காலத்துக்கு ஏற்ற மாதிரி மனிதர்களின் எண்ணங்களும், ஆலோசனைகளும் மாறிக்கொண்டே இருக்கும். ஹீரோயினை தாண்டி அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

வில்லி கேரக்டர்களிலும், பீரியட் படங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். இதுபோன்ற படங்கள் எனக்கு மிகப்பெரிய உந்துதலை ஏற்படுத்தும். நல்ல பீரியட் கதை கிடைத்தால் அதில் நிச்சயமாக நடிப்பேன்’ என்று கூறினார்.

katrina

மேலும் இயக்குநர் ஸ்ரீராம் ராகவனுக்கு நான் தீவிர ரசிகை. 'மெரி கிறிஸ்மஸ்' படத்தில் அவரோடு இணைந்து  பணியாற்றியது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. அவர் திறமைக்கும், உணர்வுகளுக்கும் மிகுந்த மதிப்பு அளிப்பார் என்றும் கூறினார்.

From around the web