தனுஷ் D-51 படத்தில் இணைந்த டோலிவுட் கிங்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி!

 
D-51

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் ‘தனுஷ் 51’ படத்தில் தனுஷுடன் டோலிவுட் கிங் நாகார்ஜூனா இணைந்து நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படம் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இதை அடுத்து, தனது 50 படத்தை இயக்கி நடிக்கிறார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உட்படப் பலர் நடிக்கின்றனர்.  இந்தப் படத்துக்காக சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இசையமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதைத் தொடர்ந்து, தனது 51வது படத்தில், தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவுடன் நடிகர் தனுஷ் கைகோர்க்க உள்ளார். இந்த படத்திற்கு தனுஷ் 51 (D-51) என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து டோலிவுட் கிங் நாகார்ஜூனா நடிக்க இருக்கிறார் என கூறப்பட்டு வந்த நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

D-51

இந்நிலையில் கடந்த 37 ஆண்டுகளாக வித்தியாசமான வேடங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் 'கிங்' நர்கார்ஜுனா நேற்று (ஆகஸ்ட் 29) தனது 64வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளுக்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

அப்போது தயாரிப்பாளர்கள் சுனில் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் நாகார்ஜுனாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, D-51 படத்தில் நாகார்ஜுனா, தனுஷுடன் இணைந்து நடிக்கும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டனர். இதையடுத்து முதல் முறையாக ஒன்றிணையும் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா காம்போவுக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

D-51

மேலும், படத்தின் தாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாக உள்ளதாகவும், இதுவரை பார்த்திராத புதிய தோற்றத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

From around the web