‘தளபதி 68’ படத்தின் டைட்டில் இதுதான்.. வெளியான அப்டேட்!

 
Thalapathy 68

விஜய் நடித்து வரும் ‘தளபதி 68’ படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

‘லியோ’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கம் புதிய படத்தில் நடித்து வருகிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த இந்த படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. சென்னையில் இளம் விஜய் நடிக்கும் காட்சி மற்றும் பாடல்கள் படமாக்கப்பட்டன. பின்னர் தாய்லாந்து சென்று அங்கு அதிரடி ஆக்‌ஷன் காட்சி ஒன்றை படமாக்கியது. தற்போது இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக தளபதி 68 படக்குழுவினர் ஐதராபாத்தில் முகாமிட்டு உள்ளனர்.

Thalapathy 68

இதனிடையே தளபதி 68 படத்தின் டைட்டில் குறித்து பல்வேறு தகவல்கள் கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் உலா வந்த வண்ணம் உள்ளன. இப்படத்திற்கு ஆங்கிலத்தில்தான் தலைப்பு வைக்கப்பட உள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியானது. ‘பசில்’ அல்லது ‘பாஸ்’ என்பதுதான் தலைப்பாக இருக்கும் என கூறப்பட்டது.

இந்த தகவல்கள் வெளியானவுடன் தளபதி 68 படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை வெளியிட்டார். அந்த பதிவில், தான் அனைத்து அப்டேட்டுகளையும் பார்த்ததாகவும். அனைவரது அன்பிற்கும் நன்றி எனவும் தெரிவித்திருந்தார். மேலும், வெங்கட் இப்படத்திற்காக பெரிய ப்ளானை வைத்திருப்பதாகவும் படத்தின் பெயர் பாஸ் அல்லது பசில் இரண்டுமே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Thalapathy 68

அர்ச்சனா கல்பாத்தி சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட பதிவில் ரசிகர்கள் யூகித்த இரண்டு தலைப்புகளுமே இல்லை என்று கூறிவிட்டார். தற்போது சினிமா வட்டாரங்களில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தளபதி 68 படத்தின் பெயர், ‘G.O.A.T’ என கூறப்படுகிறது. இதற்கு அர்த்தம் Greatest Of All Times. ‘அனைத்திலும் சிறந்து விளங்குபவர்’ என்பதே இதற்கு அர்த்தமாகும். இதுதான் படத்தின் இறுதி டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

From around the web