விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தின் 3வது பாடல்.. அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு

 
GOAT

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘கோட்’ படத்தின் மூன்றாவது பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விஜயின் 68வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

Goat

இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. சென்னை, ராஜஸ்தான் மற்றும இஸ்தான்புல் ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு, கேரளாவில் நடைபெற்றது. தற்போது, இந்த படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 5-ம் தேதி ரிலீஸ் என அறிவித்த பின்பு படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் புரோமோஷனும் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது.

முன்னதாக விஜய், பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல் ஆகியோர் நடனத்தில் ‘விசில் போடு’ பார்ட்டி பாடலாக யுவன் இசையில் வெளியாகி இருந்தது. ஆனால், இந்தப் பாடல் பெரிதாக வரவேற்பு பெறாமல் போனது. இதனால், இரண்டாவது பாடலை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்த நிலையில், இன்று விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது பாடல் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.


இந்நிலையில் ‘கோட்’ படத்தின் மூன்றாவது பாடல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் ‘கோட் படத்தின் அடுத்த அப்டேட் 3வது பாடல்’ என்று பதிவிட்டுள்ளார். வெங்கட் பிரபுவின் இந்த பதிவு விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

From around the web